/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெயர் மாற்றியாவது மீண்டும் குடிமராமத்து திட்டம் வரணும்! விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 04, 2024 05:25 AM
திருப்பூர் : 'அ.தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தை, பெயர் மாற்றம் செய்தாவது அமல்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், கிராம ஊராட்சிப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன. விளைவாக, கடந்த, பல ஆண்டுகளாக புதர்மண்டி கிடந்த குளம், குட்டை, பாசன கால்வாய் ஆகியவை துார்வாரி, சுத்தம் செய்யப்பட்டன.
அவ்வப்போது பெய்த மழையில் குளம், குட்டைகள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது; விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. இத்திட்டம், கிராமப்புற மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அலங்கியம் பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ''பாசன கால்வாய் வழியாக வரும் நீர் தான், விவசாய நிலங்களுக்கு பிரதானமாக இருந்து வருகிறது. குடிமராமத்து திட்டத்தால், குளம், குட்டை மற்றும் பாசன கால்வாய் சுத்தம் செய்யப்பட்டன; இதனால், நீர் வளம் பெருகியது.
தி.மு.க., அரசு இத்திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். குடிமராமத்து திட்டம் என்ற பெயரை மாற்றி வேறு பெயரிலாவது நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.