ADDED : மே 06, 2024 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;கார் மரத்தில் மோதி விசைத்தறிக்கூட உரிமையாளர் பலியானார்.
தெக்கலுார், சூரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், கந்தசாமி, 57. விசைத்தறி கூட உரிமையாளர். நேற்று மாலை கந்தசாமி அவிநாசியில் இருந்து காரில் தெக்கலுார் சென்றுள்ளார். கந்தம்பாளையம் பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரமாக இருந்த புளிய மரத்தின் மீது பலமாக மோதியது. படுகாயமடைந்த அவர் பலியானார்.