/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ.வி.எம்., அறைகள் கலெக்டர் ஆய்வு
/
இ.வி.எம்., அறைகள் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 21, 2024 11:42 AM
திருப்பூர்;பல்லடம், காங்கயம், தாராபுரத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பறைகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூரில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, அவை பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்படும். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வந்த பின், அவற்றில் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு, அந்த வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் வரை, பாதுகாப்பாக வைப்பதற்காக தாலுகா அலுவலகத்தில் 'ஸ்ட்ராங் ரூம்' தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கும் அறை தொடர்பாக, ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட காங்கயம், தாராபுரம் மற்றும் கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதில், பல்லடம், காங்கயம் தாசில்தார் அலுவலகம் மற்றும் தாராபுரத்தில் அரசு கல்லுாரி என, மூன்று இடங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தார்.

