/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண் சிகிச்சை முகாம் 58 பேருக்கு பரிசோதனை
/
கண் சிகிச்சை முகாம் 58 பேருக்கு பரிசோதனை
ADDED : ஆக 13, 2024 01:47 AM
உடுமலை:உடுமலை லயன்ஸ் சங்கத்தின் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
உடுமலை லயன்ஸ் சங்கம், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம், லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமில் கண்புரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள், கண் கருவிழியில் புண், கிட்டபார்வை, துாரப்பார்வை குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. லயன்ஸ் சங்கத்தலைவர் பழனிசாமி, முன்னாள் மாவட்ட கவர்னர் குருநாதன், டாக்டர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 58 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் 31 பேர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அடுத்தகட்ட பரிசோதனை மற்றும் அறுவைசிகிச்சைக்கு செய்து கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.