/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் வரத்து ஓடையை துார்வாரணும்: ஆலாம்பாளையத்தில் எதிர்பார்ப்பு
/
நீர் வரத்து ஓடையை துார்வாரணும்: ஆலாம்பாளையத்தில் எதிர்பார்ப்பு
நீர் வரத்து ஓடையை துார்வாரணும்: ஆலாம்பாளையத்தில் எதிர்பார்ப்பு
நீர் வரத்து ஓடையை துார்வாரணும்: ஆலாம்பாளையத்தில் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:57 PM

உடுமலை:ஆலாம்பாளையம் குளத்துக்கான நீர் வரத்து ஓடையை துார்வாரி நீர் தேக்க பகுதியில், கழிவுகளை அகற்ற, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்துக்கு முன்பு, மழை நீர் ஓடைகள் வாயிலாக, நீர் வரத்து கிடைத்து வந்தது.
இந்த ஓடைகள் பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், குளம் நிரம்புவதில், சிக்கல் இருந்தது. இதையடுத்து, பி.ஏ.பி., துணை அமைப்பாக குளத்தை சேர்த்து, கால்வாய் வாயிலாக தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, கடந்த, 2012 முதல், பி.ஏ.பி., திட்டத்தில் குளத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
தற்போது, மண்டல பாசன காலத்தில், அரசாணை அடிப்படையில், பூசாரிநாயக்கன்குளத்துக்கு, பி.ஏ.பி., கால்வாயில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, குறிப்பிட்ட இடைவெளியில், குளத்துக்கு தண்ணீர் நிரப்புவதால், சுற்றுப்பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் சரிவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி.ஏ.பி., கால்வாயில் இருந்தும், மழைக்காலத்தில், ஓடைகளில் இருந்தும், குளத்துக்கு நீர் வரத்து அளிக்கும் ஓடையை குறிப்பிட்ட இடைவெளியில், துார்வார வேண்டும்.
நீர் தேக்க பகுதியில் தேங்கியுள்ள அனைத்து வகை கழிவுகளையும் அகற்றவும், மண்டல பாசன காலத்தில், குளத்துக்கு தண்ணீர் திறக்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.