/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீமைகருவேல மரங்களை அகற்ற எதிர்பார்ப்பு
/
சீமைகருவேல மரங்களை அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : மார் 12, 2025 10:42 PM
உடுமலை; பி.ஏ.பி., பாசனத்திற்கு, தொகுப்பு அணைகளிலிருந்து தண்ணீர் பெறப்பட்டு, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணையிலிருந்து துவங்கி, காங்கேயம் வரை செல்லும் பிரதான கால்வாயின் இருகரைகளிலும், சீமை கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. பல கி.மீ., துாரத்திற்கு இம்மரங்கள் கரைகளை ஆக்கிரமித்துள்ளதால், கால்வாயில் செல்லும் தண்ணீர் உறிஞ்சப்படுவதுடன், விதைகளும் எளிதாக பரவுகின்றன.
பி.ஏ.பி., பாசனப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறட்சி நிலவி வருகிறது. தரிசு நிலங்கள், விளைநிலங்களின் வேலி, கிளை வாய்க்கால், பகிர்மான வாய்க்கால், குளங்கள், தடுப்பணைகள் என அனைத்து இடங்களிலும், சீமைக்கருவேல மரங்கள் அதிகளவு உள்ளன.
இம்மரங்கள், நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதுடன், அதிக வெப்பத்தை வெளியிடுவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, பிரதான கால்வாய் பகுதியில், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, உடுமலை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.