/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலாவதியான குளிர்பானம் பறிமுதல்
/
காலாவதியான குளிர்பானம் பறிமுதல்
ADDED : மார் 08, 2025 11:15 PM

திருப்பூர்: உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில், கடைகளில் இருந்த காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மாவட்டம் முழுவதும், அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கோடைகாலம் துவங்கியுள்ளதால், பழக்கடைகள், ஜூஸ் விற்கும் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடந்த ஆய்வில், காலாவதியான பிறகும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 240 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், 12 கிலோ பழ வகைகள், மூன்று லிட்டர் பழச்சாறுகள் பறிமுதல் செய்து, தரையில் கொட்டி அழிக்கப்பட்டன. சுகாதாரமான முறையில் பழக்கடைகள், பழ ஜூஸ் விற்கும் கடைகள் இயங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.