ADDED : பிப் 23, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உருவான விவரம் குறித்து செல்லப்பபுரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மங்கைபாரதி பதிப்பகம் கந்தசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, திருப்பூர் மாவட்டம் அமைக்கப்பட்டதன் தேவை மற்றும் நோக்கம் குறித்தும், வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகள் குறித்தும் விளக்கினார். உதவி தலைமையாசிரியர் சுமதி, பேசினார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள், வரலாற்று குறிப்புகள், சுதந்திர போராட்டத்தில் திருப்பூரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்த குறிப்புகள், படங்கள், புத்தகங்கள் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

