/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நீட்டிக்கணும்: பெற்றோர் வலியுறுத்தல்
/
தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நீட்டிக்கணும்: பெற்றோர் வலியுறுத்தல்
தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நீட்டிக்கணும்: பெற்றோர் வலியுறுத்தல்
தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நீட்டிக்கணும்: பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : ஆக 20, 2024 10:14 PM
உடுமலை : அரசுப்பள்ளிகளில் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும் நாட்களை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மாணவியர் பயன்பெறும் வகையில், தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அவ்வகையில், அரசுப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி கல்வியாண்டு தோறும் வழங்கப்படுகிறது.
ஒரு வகுப்புக்கு இருபது மாணவியர் வீதம், மூன்று மாதங்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படுகிறது. கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலை பயிற்சியாளர்கள் வாயிலாக, ஏதேனும் ஒரு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் கல்வியாண்டின் இறுதியில் மட்டுமே துவங்குகிறது. அதிலும் மாணவியருக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சி குறைவான நாட்கள் மட்டுமே வழங்கப்படுவதால், அடுத்த கல்வியாண்டு வரும் போது, மாணவியருக்கு மீண்டும் துவக்கத்திலிருந்து வகுப்புகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதேபோல், மாணவியருக்கு மட்டுமே இப்பயிற்சியாக இருக்கிறது. இந்நிலையை மாற்றவும், பயிற்சி கல்வியாண்டு முழுவதும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்வதற்கும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
தற்காப்பு பயிற்சி அளிக்கும் திட்டம், கடந்த 2016ம் ஆண்டு முதல் அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலில் வட்டாரத்துக்கு ஒரு பள்ளியாக துவக்கப்பட்டு, தற்போது மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு பெற்றோரிடமும் அதிகமான வரவேற்பு உள்ளது.
ஆனால் திட்டத்தின் நோக்கம் அரைகுறையாகவே உள்ளது. மாணவியர் இதனால் பயன்பெற முடிவதில்லை. பயிற்சிகாலம் மிக குறைவாக இருப்பதால், அவர்களுக்கு துவக்கநிலை மட்டுமே கற்றுதரப்படுகிறது.
மேலும், மாணவர்களுக்கும் இப்போது இத்தகைய பயிற்சிகள் தேவையாக உள்ளது. இப்பயிற்சிகள் அவர்களின் மனஒருமைப்பாட்டையும் மேம்படுத்துகிறது.
கல்வித்துறை பயிற்சி நாட்களை நீடிப்பதற்கும், முழுமையாக இத்திட்டம் மாணவர்களை சென்றடையவும் நடவடிக்கை எடுப்பதால் மட்டுமே திட்டம் பயனளிக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.