/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ கல்லுாரிக்கு கண்கள் - உடல் தானம்
/
மருத்துவ கல்லுாரிக்கு கண்கள் - உடல் தானம்
ADDED : ஜூலை 25, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி, காமராஜ் வீதியை சேர்ந்தவர் அம்பலவாணன், 97. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற இவர், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்காக பல ஆண்டுகள் செயலாற்றி வந்தார். வயது முதிர்வின் காரணமாக, நேற்று காலமானார்.
அவரது விருப்பத்தின்படி, அவரது கண்கள் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல், திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு, அத்திக்கடவு - அவிநாசி போராட்டக்குழுவினர், தொழில்பேட்டை உறுப்பினர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

