ADDED : ஆக 25, 2024 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், சிகரங்கள் அறக்கட்டளை, அனைத்து இந்திய சட்ட உரிமை மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், ரத்ததானம், கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர, அன்பகம் திருப்பதி, கிட்ஸ் கிளப் குழுமங்களின் தாளாளர் மோகன் கார்த்திக் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேயர் தினேஷ்குமார் ரத்த தானம் வழங்கியவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு, 37 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது. திருப்பூர் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மூலம், 76 பேருக்கு கண் பரிசோதிக்கப்பட்டு, 49 பேருக்கு குறைபாடு அறியப்பட்டது; 14 பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

