/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் கவலை
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் கவலை
ADDED : ஆக 07, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரியத்துவங்கியுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், கோடை கால மழைக்குப்பிறகு, பல ஆயிரம் ஏக்கரில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, வரத்து துவங்கியுள்ளது.
தினசரி சந்தையில், 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி 250 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தக்காளி பெட்டி விலை கிலோ 200 ரூபாயாக குறைந்துள்ளது. சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், விலை சரிந்து வருவது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.