ADDED : பிப் 25, 2025 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன்; விவசாயி. வாழைத்தாருடன் வந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
அவர் கூறியதாவது: நான்கு ஏக்கர் பரப்பளவில் கலப்பின ஜிண்டால் ரக நேந்திர வாழை சாகுபடி செய்துள்ளேன். வாழை இலைகள் மின் கம்பியில் உரசியதையடுத்து, எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல், மின்வாரிய ஊழியர்கள் அவற்றை வெட்டிவிட்டனர். ஒரு மாதத்துக்குள் வெட்டுவதற்கு தயாரான நிலையில், குலைதள்ளிய 200 வாழைகளை வெட்டிவிட்டனர். இதனால், 2 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விசாரணை நடத்தி, வாழை மரங்களை சேதப்படுத்திய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

