/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
/
5வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
ADDED : ஏப் 27, 2024 12:46 AM
பல்லடம்;பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியால் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி இப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் விவசாயிகள், கடந்த காலத்தில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே, கல்குவாரி விதிமுறை மீறி இயங்கி வருவதாக கூறி, விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படாத நிலையில், நேற்று, ஐந்தாவது நாளாக விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்'' என்றனர்.

