/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நாபெட்' ரூ.150 கோடி நிலுவை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
/
'நாபெட்' ரூ.150 கோடி நிலுவை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
'நாபெட்' ரூ.150 கோடி நிலுவை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
'நாபெட்' ரூ.150 கோடி நிலுவை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
ADDED : ஆக 06, 2024 12:00 AM

பல்லடம்:தென்னை விவசாயிகளுக்கு 'நாபெட்' நிறுவனம், 150 கோடி ரூபாயை ஒரு வார காலத்திற்குள் வழங்காவிட்டால், சென்னை நாபெட் அலுவலகத்தை முற்றுகையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
விவசாயிகளுக்கு, கொப்பரை தேங்காய்க்கு கிலோவுக்கு 150 ரூபாய் மட்டுமே கட்டுப்படியான விலையாகும். அரசு, 111.50 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான நாபெட் நிறுவனம், மூன்று மாதங்கள் முன், 18,000 தென்னை விவசாயிகளிடமிருந்து, 150 கோடி ரூபாய் மதிப்பிலான கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்தது.
இதுவரை பணத்தை தரவில்லை. மூன்று நாட்களுக்குள் பணத்தை தர வேண்டும் என்பது விதிமுறை. பணத்தை தராததால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால், தென்னை விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வார காலத்துக்குள் பணம் வழங்காவிட்டால், சென்னை எழும்பூரில் உள்ள நாபெட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.