/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாகுபடி செழிக்க மாட்டு வண்டி பயணம் திருமூர்த்திமலையில் திரண்ட விவசாயிகள்

ADDED : ஆக 04, 2024 10:50 PM

உடுமலை:ஆடிப்பட்டத்தில் சாகுபடி செழிக்க, பாரம்பரிய முறைப்படி, திருமூர்த்திமலைக்கு மாட்டு வண்டிகளில் பயணித்து, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், விவசாயிகள் நேற்று வழிபாடு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்திமலையில், மும்மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தென்மேற்கு பருவமழை சீசனுக்கு பிறகு துவங்கும் ஆடிப்பட்டத்தில், சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம்.
இந்த சீசனில் சாகுபடி செழிக்க, ஆடி அமாவாசையன்று, உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து மாட்டு வண்டிகளில் பயணித்து, அமணலிங்கேஸ்வரரை வழிபாடு செய்வது பாரம்பரியமாக நடைபெறுகிறது.
மேலும், ரேக்ளா பந்தயத்துக்காக பழக்கப்படும், காங்கயம் காளைகளை, சவாரி வண்டிகளில் பூட்டி, திருமூர்த்திமலைக்கு கோவிலுக்கு அழைத்து வந்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். அந்த வகையில், நேற்று, 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில், அணிவகுத்து சென்ற விவசாயிகள், கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட மாட்டு வண்டிகளால், திருமூர்த்திமலையே களைகட்டியது. கோவிலில், நேற்று நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்தன.