/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிப்பிட விவகாரம் விவசாயிகள் உண்ணாவிரதம்
/
கழிப்பிட விவகாரம் விவசாயிகள் உண்ணாவிரதம்
ADDED : செப் 01, 2024 02:10 AM

திருப்பூர்;நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஊராட்சி நிர்வாகம் கழிப்பிடம் கட்டுவதைக் கண்டித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பெதப்பம்பட்டி. இங்குள்ள நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணியைத் துவங்கியுள்ளது.இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், அதை கட்டி, அருகேயுள்ள நில உரிமையாளர்களுக்கு நெருக்கடி தரும் விதமாக, ஊராட்சி நிர்வாகம் நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலையடுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதத்தை துவங்கினர்.பிரச்னைக்கு உரிய தீர்வு பெறும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர். இருப்பினும், கலெக்டர் தலையிட்டு, கட்டுமானப் பணி நிறுத்தப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்து, தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.