நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் படி கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் அமைக்க வேண்டும்.
ஆக., 15ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் மக்களுடன் வந்து காங்கயம், திருப்பூர் ரோட்டில் உள்ள பொதுப்பணிதுறை அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். காங்கயம் தாசில்தார் மயில்சாமி பேச்சு நடத்தினார். உறுதிமொழியை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.