/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலையுடன் பிணைந்த ஆடை வடிவமைப்பு 'நிப்ட்-டீ' மாணவர்கள் அசத்தல்
/
கலையுடன் பிணைந்த ஆடை வடிவமைப்பு 'நிப்ட்-டீ' மாணவர்கள் அசத்தல்
கலையுடன் பிணைந்த ஆடை வடிவமைப்பு 'நிப்ட்-டீ' மாணவர்கள் அசத்தல்
கலையுடன் பிணைந்த ஆடை வடிவமைப்பு 'நிப்ட்-டீ' மாணவர்கள் அசத்தல்
ADDED : மார் 28, 2024 03:44 AM

திருப்பூர் : கலையை ஊக்குவிக்கும் வகையில், 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர்கள், கலைகளுடன் பிணைந்த ஆடை வடிவமைப்பை அறிமுகம் செய்துள்ளனர்.
திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட் - டீ' கல்லுாரி இறுதியாண்டு 'அப்பேரல் பேஷன் டிசைன்' மாணவர் குழுவினர், கலை மற்றும் பேஷன் இரண்டையும் ஒருங்கிணைத்து, புதிய ஆடை வடிவமைப்பு பயணத்தை துவக்கியிருக்கிறது.
பேராசிரியர் பூபதி விஜய் வழிகாட்டுதலுடன், 'வான் கோ', 'பிக்காசோ' மற்றும் 'மைக்கலாஞ்சலோ' ஆகியோரின் கலை படைப்புகளை, சமகால ஆடை வடிவமைப்புகளுடன் பிணைத்து, புதிய வகை ஆடைகளை தயாரித்துள்ளனர். 'கியூரேஷன்' மற்றும் புதுமையான டிசைன்கள் மூலம் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற, கலை நயம் மிகுந்த ஆடைகளை உருவாக்கியுள்ளனர்.
புதிய ஆடை வடிவமைப்பு குறித்து, மாணவர் சஞ்சய் கூறுகையில், புகழ்பெற்ற ஓவியங்கள் மற்றும் கலைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் புதிய முயற்சி எடுத்துள்ளோம். ஓவிங்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாகவும், இந்த ஆடைகளை உருவாக்கியுள்ளேன். இவ்வகை ஆடைகள், இன்றைய தலைமுறையினருக்கு, கலை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். பேஷன் துறையில், புதுமையை புகுத்துவதாகவும் இருக்கும்,'' என்றார்.