/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிந்து விழும் வீடுகளால் அச்சம் மலைவாழ் மக்கள் வேதனை
/
இடிந்து விழும் வீடுகளால் அச்சம் மலைவாழ் மக்கள் வேதனை
இடிந்து விழும் வீடுகளால் அச்சம் மலைவாழ் மக்கள் வேதனை
இடிந்து விழும் வீடுகளால் அச்சம் மலைவாழ் மக்கள் வேதனை
ADDED : ஆக 09, 2024 02:54 AM
உடுமலை:இடிந்து விழும் வீடுகளில், அச்சத்தில் வாழும் நிலை மாற, அரசு திட்டத்தில், வீடு கட்டித்தர வேண்டும்; குடியிருப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருமூர்த்திமலை மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில், அணை கரை எதிரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. சமவெளியாக இல்லாமல், மலைச்சரிவில், பாறைகளின் இடைவெளியில், வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
மண் சுவர் மற்றும் மேற்புறத்தில், தகடுகளை வைத்து கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில், வீடுகளின் சுவர் விழுந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.
முன்பு கட்டப்பட்ட வடிகால் பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. போதிய தெருவிளக்குகளும் இல்லை. பொதுக்கழிப்பிட வசதியும் இல்லாததால், மக்கள் பாதிக்கின்றனர்.
இடியும் நிலையிலுள்ள வீடுகளுக்கு மாற்றாக, மத்திய, மாநில அரசு சார்பில், மானியத்திட்டத்தில், வீடுகள், கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்பு, இப்பகுதி மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுரிமை இல்லை. எனவே, அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, அப்பகுதி மக்களுக்கு, ஓட்டுரிமை வழங்கப்பட்டு, தளி பேரூராட்சியிலும் அக்குடியிருப்பு தனி வார்டாக சேர்க்கப்பட்டது.
எனவே, தளி பேரூராட்சி வாயிலாக, குடியிருப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மானிய திட்டத்தில் வீடுகள் கட்டித்தரவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.