/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலைப்பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்
/
புகையிலைப்பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்
ADDED : பிப் 28, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியிலுள்ள மளிகைக்கடை மற்றும் பேக்கரிகளில், அவிநாசி வட்டார சுகாதார ஆய்வாளர் தலைமையில், அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், பஸ் ஸ்டாப் அருகிலுள்ள, சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான, ஸ்ரீராம் மளிகை ஸ்டோரில், தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.