/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜவுளிக்கடையில் தீ விபத்து ;ரூ.பல லட்சம் துணி சேதம்
/
ஜவுளிக்கடையில் தீ விபத்து ;ரூ.பல லட்சம் துணி சேதம்
ஜவுளிக்கடையில் தீ விபத்து ;ரூ.பல லட்சம் துணி சேதம்
ஜவுளிக்கடையில் தீ விபத்து ;ரூ.பல லட்சம் துணி சேதம்
ADDED : மே 14, 2024 01:26 AM

அவிநாசி:அவிநாசியில் உள்ள ஜவுளிக்கடையில், நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் சேதமானது.
அவிநாசி, மேற்கு ரத வீதியில் வசிப்பவர் கதிரேசன். 36. இவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில், நேற்று அதிகாலை தரைத்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதில், செல்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள், மின்சாதனங்கள் ேஷாகேஸ் எரிந்து சேதமானது.
தகவல் அறிந்து அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை, 2 மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அவிநாசி போலீசார் தெரிவித்தனர்.