/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் விழுந்த மயில் :தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
/
கிணற்றில் விழுந்த மயில் :தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
கிணற்றில் விழுந்த மயில் :தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
கிணற்றில் விழுந்த மயில் :தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
ADDED : ஏப் 21, 2024 12:21 AM

அவிநாசி;அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள குருக்ருபா பக்த ஜன சேவா அறக்கட்டளையின் சுப்பையா சுவாமி மடத்தில் கிணறு ஒன்று உள்ளது. நுாற்றிருபது அடி ஆழ கிணற்றில் 20 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது.
பெண் மயில் ஒன்று உணவு தேடி செல்லும்போது கிணற்றில் விழுந்தது. அவிநாசி தீயணைப்புத்துறையினர், எஸ்.ஐ., வேலுச்சாமி, சேகரன் மாரியப்பன், வசந்தகுமார் உள்ளிட்டோர் மயிலை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர் கிணற்றில் இறங்கி, பெண்மயிலின் கால்களை சரடால் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தார். காலில் கட்டப்பட்டிருந்த சரடை தீயணைப்பு வீரர் அவிழ்த்ததும் சுற்றிலும் இருந்த பொதுமக்களை பார்த்து அச்சத்தில் பறந்து மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் சளைக்காமல் ஒரு கணம் கூட தாமதிக்காமல் மீண்டும் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டு கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

