/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல் தலைமுறை பட்டதாரியானார் அன்பு மகள் மேளதாளத்துடன் சலுான் கடைக்காரர் வரவேற்பு
/
முதல் தலைமுறை பட்டதாரியானார் அன்பு மகள் மேளதாளத்துடன் சலுான் கடைக்காரர் வரவேற்பு
முதல் தலைமுறை பட்டதாரியானார் அன்பு மகள் மேளதாளத்துடன் சலுான் கடைக்காரர் வரவேற்பு
முதல் தலைமுறை பட்டதாரியானார் அன்பு மகள் மேளதாளத்துடன் சலுான் கடைக்காரர் வரவேற்பு
ADDED : ஆக 30, 2024 10:51 PM

திருப்பூர்:மேள தாளம் முழங்க, தன் மகளை தடபுடலாக வரவேற்று, வீதி மக்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தார், கருவலுாரில் சலுான் வைத்திருக்கும், ஆறுமுகம்.ஒரு சாதாரண குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையை அவரது மகள் துர்கா சுமந்து வந்திருப்பது தான், இந்த குதுாகலத்துக்கு காரணம். அதுவும், சட்டக்கல்லுாரியில் எல்.எல்.பி., என்ற சட்டப்படிப்பு முடித்து வந்திருக்கிறார்.
''நான் முதல் வகுப்பில் இருந்து, 12ம் வகுப்பு வரை, கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் படிச்சேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, வக்கீலுக்கு படிக்கணும்ன்னு ஆசை இருந்துச்சு. பிளஸ் 2 முடிச்சதும், கோவை அரசு சட்டக்கல்லுாரியில் சேர்ந்து, படிச்சு, பட்டம் வாங்கியிருக்கேன்; மனசுக்கு ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு,'' என நெகிழ்ந்தார் துர்கா.''நான், 1996ல் இருந்து சலுான் வச்சு, தொழில் நடத்திட்டு வர்றேன். நானும் படிக்கல; என் மனைவியும் படிக்கல. ஆனா, என் ரெண்டு பெண் பிள்ளைகளும் நல்லா படிப்பாங்க. துர்காவுக்கு, வக்கீலுக்கு படிக்கணும்னு ஆசை. பெண் பிள்ளைகளுக்கு பணம், காசு சேர்த்து வைக்கிறத விட, நல்ல கல்வியை கொடுத்துட்டா, அவங்களோட தலைமுறையும் நல்லா இருக்கும்ன்னு, எனக்கு தோணுச்சு; படிக்க வைச்சேன். எங்க குடும்பத்துல, என் மகள் தான் முதல் பட்டதாரி. அந்த சந்தோஷத்தை கொண்டாடத்தான் மேள தாளம் வைச்சு, பட்டாசு வெடிச்சு, மாலை மரியாதையோட என் பிள்ளையை வரவேற்றோம்,'' என மகிழ்ச்சியில் திளைத்தார் தந்தை ஆறுமுகம்.அவரது இளைய மகள், தாரணியும், சட்டப்படிப்பு படித்து வருகிறார்.