ADDED : ஆக 03, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தீரன் சின்னமலை நாள் முன்னிட்டு காங்கயத்தில் கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் வைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊரான மேலப்பாளையம் மற்றும் நினைவிடம் அமைந்துள்ள இடம் ஓடாநிலை. காங்கயம் அருகேயுள்ள இப்பகுதியில், இன்று அவரது நினைவு நாள் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
இதையொட்டி, அரசியல் கட்சி, அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வுக்கு எந்த அமைப்பும் தங்கள் கொடிகளை காங்கயம் போலீஸ் ரவுண்டானா மற்றும் பஸ்ஸ்டாண்ட் ரவுண்டானா வரை உள்ள ரோடு தடுப்புகளில் கொடிகள் கட்டக்கூடாது; பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை என காங்கயம் போலீசார் தெரிவித்துள்ளனர்.