/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம்
/
தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம்
ADDED : ஜூன் 25, 2024 12:52 AM
திருப்பூர்;தமிழக அரசின் தீவன அபிவிருத்தி திட்டத்தில், அரசு மானியத்துடன், பழத்தோட்டங்களில் ஊடு பயிராக பசுந்தீவன உற்பத்தி செய்யலாம். ஏக்கருக்கு, 3000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம், நீர்பாசன வசதியுடன், பழத்தோட்டம் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில், குறு, சிறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நீர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட விவசாயிக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதிகப்படியாக, உற்பத்தி செய்த தீவனத்தை குறைந்த விலைக்கு நிலம் இல்லாத, கால்நடை வளர்ப்பவர்களுக்கு வழங்க விருப்பமுள்ள விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
லாபகரமான கால்நடை வளர்ப்புக்கான ஒருங்கிணைந்த தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மேலும் விவரங்கள் அறிய கால்நடை மருந்தக உதவி டாக்டரை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.