ADDED : மார் 30, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 20ம் தேதி முதல் நடந்தது. 26ம் தேதி குண்டம் தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.
குண்டம் தேர்த்திருவிழாவை யொட்டி,பெருமாநல்லுார் நண்பர்கள் அன்னதான குழு சார்பில், நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

