ADDED : ஆக 24, 2026 08:22 PM
அவிநாசி, ஆக.25–
அவிநாசியில், தனியார் நிறுவன செக்யூரிட்டிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையில் நடந்தது.
போலீசாருக்கு கண், காதாக இருந்து, சந்தேக நபர்கள் நடமாட்டம், குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, ‘காவல் உதவி’ செயலி குறித்து இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, சரஸ்வதி, அம்பிகா ஆகியோர் செய்முறை விளக்கமளித்தனர். டி.எஸ்.பி., (பொறுப்பு) மனோகரன் முன்னிலை வகித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பங்கேற்றனர்.
––––
2 படங்கள்
தனியார் நிறுவன செக்யூரிட்டிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் எஸ்.பி. சிருஷ்டி சிங் பேசினார். அருகில், டி.எஸ்.பி. (பொறுப்பு) மனோகரன்.
இதில் பங்கேற்ற தனியார் நிறுவன செக்யூரிட்டிகள்.
