தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தற்காலிக ஜவுளிக்கடையா? ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு

தற்காலிக ஜவுளிக்கடையா? ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு

தற்காலிக ஜவுளிக்கடையா? ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு


ADDED : ஆக 24, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஆக. 25–

தற்காலிக ஜவுளிக்கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்க கோரி, திருப்பூர் மாவட்ட ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சங்கத்தினர் அளித்த மனு:

திருப்பூரில் நிலையான கடைகள் அமைத்து, வணிக உரிமம் பெற்று, கடை வாடகை, தொழிலாளர் சம்பளம், ஜி.எஸ்.டி., மாநகராட்சி வரி உள்ளிட்டவற்றை செலுத்தி ஜவுளி வர்த்தகம் செய்து வருகிறோம்.

ஆனால், பண்டிகை காலங்களில் வெளியூர்களை சேர்ந்தவர்கள், சமூக ஊடக பிரபலங்கள் வாயிலாக திருமண மண்டபங்கள், ஓட்டல்களை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து, அனுமதியின்றி ஜவுளி விற்பனை செய்கின்றனர். இதனால், உள்ளூர் வியாபாரிகளுக்கு வர்த்தக இழப்பும், அரசுக்கு வரியிழப்பும் ஏற்படுகிறது. மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி தற்காலிக ஜவுளிக்கடைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us