/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயில்கள் மர்ம மரணம் வனத்துறை விசாரணை
/
மயில்கள் மர்ம மரணம் வனத்துறை விசாரணை
ADDED : ஜூலை 27, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி அடுத்தவேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனில், நேற்று மாலை ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது.
தகவலறிந்து சென்ற வனக்காவலர் கணபதி செல்வம், மான் காவலர் வெங்கடேசன் ஆகியோர், இறந்த மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதே பகுதியில் கடந்த 21ம் தேதி, 3 பெண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா; வேறு காரணமா என்று வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
---
இறந்து கிடந்த மயில்.