/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்.எஸ்.பழனிசாமி மணி மண்டபம் முன்னாள் முதல்வர் பழனிசாமி திறக்கிறார்

ADDED : ஆக 17, 2024 12:07 AM

பல்லடம்;நாளை நடைபெற உள்ள மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு, விவசாயிகள் பொதுமக்களுக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்என்.எஸ்.பழனிசாமிக்கு, பல்லடம் அருகே நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில், மணிமண்டமும் கட்டப்பட்டு, நாளை (18ம் தேதி)திறப்பு விழா நடக்க உள்ளது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், பா.ம.க., தலைவர் அன்புமணி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
மணிமண்டபத் திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த விவசாயசங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். இதன் அடிப்படையில், கிராமம் கிராமமாக சென்று, விவசாயிகள் மற்றும் பல முக்கியபிரமுகர்களை நேரில் சந்தித்து, விழாவில் பங்கேற்குமாறு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள்சங்க செயல் தலைவர் வெற்றி அழைப்பு விடுத்துள்ளார்.