/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலைப்பேட்டை கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் மீண்டும் கைது
/
உடுமலைப்பேட்டை கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் மீண்டும் கைது
உடுமலைப்பேட்டை கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் மீண்டும் கைது
உடுமலைப்பேட்டை கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் மீண்டும் கைது
ADDED : ஏப் 30, 2024 08:42 PM

திருப்பூர்:ஜாமினில் வந்தும் பிணைத்தொகை செலுத்தாததால், 79 லட்சம் ரூபாய் கையாடல் செய்த முன்னாள் கூட்டுறவு சங்க செயலர் கோர்ட் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, சின்னக்குமாரபாளையம் கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் ஜெகநாதன், 79.22 லட்சம் ரூபாயை கையாடல் செய்த வழக்கு, கோவையில் பதிவு செய்யப்பட்டது. வழக்கு, 2022ல் திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கோரி விண்ணப்பித்ததால், 2023 ஜன., 2ல், 5 லட்சம் ரூபாயை, கூட்டுறவு சங்கத்தில் பிணைத்தொகை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. ஜாமினில் வந்த பிறகும், பிணைத்தொகை செலுத்தாமல், பிணைத்தொகையை குறைக்க வேண்டி ஜெகநாதன் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஒரு லட்சம் ரூபாயை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது; அதற்கு பிறகும், 40,000 ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். இந்நிலையில், மார்ச் 1ல் விசாரணைக்கு வந்த போது, மீண்டும் ஜெகநாதனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
டி.எஸ்.பி., முருகானந்தம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அனுபல்லவி தலைமையிலான போலீசார், ஒரு வாரமாக தேடினர். நேற்று முன் தினம் காலை, 8:30 மணிக்கு, சின்னவீரம்பட்டியில் இருந்த ஜெகநாதனை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.