/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணம் கேட்டு கடத்தல் நிருபர்கள் நால்வர் கைது
/
பணம் கேட்டு கடத்தல் நிருபர்கள் நால்வர் கைது
ADDED : ஆக 27, 2024 04:11 AM
திருப்பூர்: திருப்பூர், கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் வசந்த், 46, பனியன் தொழிலாளி. பாண்டியன் நகர் அருகே, நேற்று முன்தினம் இரவு மது அருந்தி கொண்டிருந்தபோது, காரில் வந்த ஆறு பேர் கும்பல் அவரை கடத்தியது.
அருகிலுள்ள வாஷிங்டன் நகரில் காட்டுப்பகுதியில் வைத்து, 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறவே, கடுமையாக தாக்கி, மீண்டும் கூத்தம்பாளையத்தில் இறக்கி விட்டு சென்றனர்.
திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து, நான்கு பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
வசந்திடம், 'நீ தவறான தொழில் செய்து வருகிறாய்; 1 லட்சம் ரூபாய் கொடு' என கும்பல், மிரட்டியுள்ளது. வசந்தின் உறவினர் இருவரையும் அக்கும்பல் தாக்கியது. கும்பலை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில் அன்புராஜ், நீலகண்ணன், பரத், முரளி ஆகியோர், பிரபலம் ஆகாத வார மற்றும்மாத பத்திரிகைகளில் நிருபர்களாக உள்ளதாகத்தெரிவித்துள்ளனர். முரளியும், பரத்தும் சகோதரர்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

