/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி பெயரில் மோசடி தொழிலாளி தற்கொலை
/
வங்கி பெயரில் மோசடி தொழிலாளி தற்கொலை
ADDED : மே 11, 2024 12:34 AM
திருப்பூர்;வங்கி பெயரில் நடந்த மோசடியில் பணத்தை இழந்த பனியன் தொழிலாளி, தற்கொலை செய்து கொண்டார்.
நல்லுார் போலீசார் கூறியதாவது:திருப்பூர், காங்கயம் சாலை, பிள்ளையார் கோவில், 2வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 36; பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக இருந்தார். இவரது மனைவி, கடந்த, 3 மாதம் முன், ஒரு வங்கியில் 'கிரெடிட் கார்டு' பெற்றிருந்தார். கடந்த, 3 ஆண்டுக்கு முன், 'கிரெடிட் கார்டை' திரும்ப ஒப்படைக்க முற்பட்டு, வங்கி ஊழியர்களுடன் பேசி வந்துள்ளார்.
இதற்கிடையில், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பிரகா ைஷ தொடர்பு கொண்ட பெண் ஒருவர், 'கிரெடிட் கார்டு' சேவையை நிறுத்துவதாக கூறி, 'பாஸ்வேர்டு' கேட்டுள்ளார். அதை நம்பி, பிரகாஷ் 'பாஸ்வேர்டு' தெரிவித்த நிலையில், 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கியதாக, பிரகாஷூக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பிரகாஷ், வங்கி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் உரிய பலன் இல்லை.மாவட்ட கலெக்டர், சைபர் கிரைம் போலீசாரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், விரக்தியடைந்த பிரகாஷ், நேற்று, வீட்டில் விஷமருந்திய நிலையில், மயங்கினார். அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.