/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி: இளைஞர்களுக்கு 'நிப்ட்--டீ' கல்லுாரி அழைப்பு
/
வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி: இளைஞர்களுக்கு 'நிப்ட்--டீ' கல்லுாரி அழைப்பு
வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி: இளைஞர்களுக்கு 'நிப்ட்--டீ' கல்லுாரி அழைப்பு
வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி: இளைஞர்களுக்கு 'நிப்ட்--டீ' கல்லுாரி அழைப்பு
ADDED : ஏப் 30, 2024 11:38 PM
திருப்பூர்:வேலை வாய்ப்புடன் கூடிய இலவச நான்கு மாத தொழிற்பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம் என, 'நிப்ட்-டீ' கல்லுாரி அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறைக்கு வலுசேர்க்கும் வகையில், திறமையான தொழிலாளரை வழங்கு வதற்காக, 'நிப்ட்--'டீ கல்லுாரியின் திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. மத்திய, மாநில அரசு திட்டங்களில், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதன் மூலம், ஏழை குடும்பங்களின் வருமானத்தை ஊக்குவித்தல், தொழில் திறன்மிகு தொழிலாளரை பணியமர்த்தி, உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
பின்னலாடை உற்பத்தியை பிரதானமாக கொண்டுள்ள திருப்பூர், நாட்டின் வேலைவாய்ப்பு மிகுந்த நகராக மாறியுள்ளது. நிட்டிங் முதல் பேக்கிங் வரை ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்கள் தேவை அதிகம் உள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையை வலுப்படுத்த, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திறன் பயிற்சி திட்டங்கள் உறுதுணையாக உள்ளது.
திருப்பூரில் பின்னலாடை துறையினர் இணைந்து செயல்படுத்தி வரும், 'நிப்ட்--டீ' கல்லுாரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு, அரசு திட்டத்தின் வாயிலாக, தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையத்தில், ஆடை வடிவமைப்புத் துறையில் உதவி பேஷன் டிசைனர் பயிற்சி, கடந்த 29ம் தேதி துவங்கியுள்ளது. பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்தவர்களும், 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர்களும், இப்பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.
முற்றிலும் இலவசம்
நான்கு மாத பயிற்சியில், தங்குமிடம், உணவு, பாடப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக திறன் பயிற்சியாக, தையல் கலை பயிற்சி, 'பேட்டர்ன் மேக்கிங்' பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கில கல்வி பயிற்சி, யோகா மற்றும் மென்திறன் பயிற்சிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
நான்கு மாதம் பயிற்சி முடிப்பவர்களுக்கு, மாநில அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்குவதால், தொழிலாளர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைக்கிறது. நேரடியாக, திறன்மிக்க தொழிலாளர்களாக பணியில் சேர்வதால், துவக்கத்திலேயே, 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்துடன், திருப்பூரில் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களில், 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோர், 80563 23111, 80566 91111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, 'நிப்ட்-டீ' கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திறன்மிக்க தொழிலாளர்களாக பணியில்
சேர்வதால், 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம்
ரூபாய் வரையிலான சம்பளத்துடன், முன்னணி
ஏற்றுமதி நிறுவனங்களில், 100 சதவீதம்
வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது