/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச மருத்துவ முகாம் 150 பேருக்கு பரிசோதனை
/
இலவச மருத்துவ முகாம் 150 பேருக்கு பரிசோதனை
ADDED : செப் 07, 2024 11:53 PM
அவிநாசி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் 68வது ஆண்டு விழா முன்னிட்டு, அவிநாசி கிளை அலுவலகத்தில், ரேவதி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அவிநாசி கிளை மேலாளர் பாரதி மணி முகாமை துவக்கி வைத்தார். ரேவதி மருத்துவமனை, தி ஐ பவுண்டேசன் ஆகியவற்றின் மருத்துவர் குழுவினர் முகாமை நடத்தினர். இதில் எல்.ஐ.சி., நிறுவன ஊழியர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில், 130 பேருக்கு, கண், இருதயம், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் நடத்தப்பட்டது. முப்பது பேருக்கு இருதய ஸ்கேன் மற்றும் இ.சி.ஜி., பரிசோதனை செய்து, 20 பேருக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.