/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சக் ஷம்' சார்பில் 29ல் இலவச மருத்துவ முகாம்
/
'சக் ஷம்' சார்பில் 29ல் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஆக 27, 2024 01:14 AM
திருப்பூர்:காங்கயம் அருகே மூலனுாரில், மாற்றுத்திறனாளர்கள், பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம், வரும், 29ம் தேதி நடக்கிறது.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஆதரவுடன், சக் ஷம் அமைப்பு, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை சார்பில், மாற்றுத்திறனாளர்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் வரும், 29ம் தேதி மூலனுார், தாராபுரம் ரோட்டிலுள்ள மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் நல சிகிச்சை துறை, மகளிர் நல சிகிச்சை துறை, பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சை, காது, மூக்கு தொண்டை நல உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கான ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு 'சக் ஷம்' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.