ADDED : ஆக 13, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோட்டரி அவிநாசி கிழக்கு, சேவூர் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் அவிநாசி கிழக்கு, ரோட்ராக்ட் அவிநாசி கிழக்கு, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் இணைந்து முறியாண்டம்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் இலவச கண் சிகிச்சை, பொது மருத்துவம், இருதய மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாமை நடத்தின.
ஊராட்சி தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். ரோட்டரி திட்ட தலைவர் விசித்திரா, தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முகாமில் 150க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

