/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் அடிக்கடி மின் வெட்டு
/
பல்லடத்தில் அடிக்கடி மின் வெட்டு
ADDED : ஆக 19, 2024 12:14 AM
பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள், பஞ்சு நுால் மில்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழில்கள் நடந்து வருகின்றன. இவற்றுக்கு மின்சாரம் அத்தியாவசியமாக உள்ளது. சமீப நாட்களாக, பல்லடம் பகுதியில் அடிக்கடி
ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாக, தொழில்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தொழில் துறையினர், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொழில்துறையினர் கூறுகையில், ''திடீரென, அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என, மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், கூடுதல் செலவு ஏற்பட்டு பணிகளும் தடைபடுகின்றன. இதேபோல், பொதுமக்களின் அன்றாட பணிகளும் இதனால் பாதிக்கப்படுகிறது. தடையின்றி மின் சப்ளை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.