ADDED : செப் 12, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பிரன்ட்லைன் பள்ளி மாணவர் அசத்தினர்.
திருப்பூர் மாவட்ட அளவில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் சைதன்யா டெக்னோ பள்ளியில் நடந்தது. 300 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷ்வந்த், இரு பிரிவுகளில் தங்கம் வென்றார்.
இதன் மூலம், திருநெல்வேலியில், 36 வது மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்றார். திறமையை வெளிப்படுத்தி, இரண்டு போட்டிகளில் வெள்ளி வென்றார். இதன் மூலம் தேசிய போட்டியில் பங்கு பெற தேர்வாகியுள்ளார்.
இதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டு ஆசிரியர் நந்தகுமார் மற்றும் பயிற்சியாளர் முரளி ஆகியோரை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந் தன், துணை செயலாளர் வைஷ்ணவி மற்றும் பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.