/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை
/
கோவில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED : செப் 17, 2024 10:14 PM

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில், நேரு வீதி மற்றும் தளி ரோடு காமாட்சி அம்மன் கோவில்களில் அம்பாளுக்கு, பவுர்ணமி நாள் சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
சீனிவாசா வீதி உச்சிமாகாளி அம்மன் கோவில், தென்னை மரத்து வீதி காமாட்சி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், ராஜாவூர் காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.
* உடுமலை அருகே சின்னபொம்மன்சாளை கிராமத்தில், பவுர்ணமியை முன்னிட்டு செல்வமாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், அம்மன் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது.