/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறிகளை நவீனமாக்க நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
/
விசைத்தறிகளை நவீனமாக்க நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
விசைத்தறிகளை நவீனமாக்க நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
விசைத்தறிகளை நவீனமாக்க நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
ADDED : மார் 15, 2025 12:31 AM

பல்லடம்; 'தமிழக பட்ஜெட்டில், தறிகளை நவீன மயமாக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, விசைத்தறி தொழிலை மேம்படுத்தச் செய்யும்,' என, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சக்திவேல் (விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் தலைவர்):
மூன்று ஆண்டு பழமையான சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத தறிகளாக நவீன மயமாக்குவதற்கான மூலதன மானியமாக, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலை மேம்படுத்தச் செய்யும்.
விசைத்தறி தொகுப்புகளில், ஏற்றுமதி பொருள்களுக்கான தறி கொட்டகைகள், சோதனை ஆய்வகங்களை நிறுவ, 20 கோடி ரூபாயும், இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு, 673 கோடி என, கைத்தறி மற்றும் ஜவுளிகளுக்கு, மொத்தம், 1,980 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
விசைத்தறி ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில் துறையினரின் பெரும்பாலான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதை வரவேற்கிறோம்.
வேலுசாமி (தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர்):
விசைத்தறி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், நவீன தறிகளுடன் போட்டிபோட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும். இதேபோல், இலவச வேட்டி சேலைக்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் வரவேற்கத்தக்கது.
கூடுதலாக, நெட் மீட்டருடன் சோலார் பேனல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். கைத்தறிகளைப் போன்றே விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தர மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
விடுபட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி தரும் என எதிர்பார்க்கிறோம்.