/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை டிவைடருக்குள் குப்பை குவியல்
/
நெடுஞ்சாலை டிவைடருக்குள் குப்பை குவியல்
ADDED : மார் 22, 2024 11:11 PM
பல்லடம்:பல்லடம், காரணம்பேட்டையில், கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி- --- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை இணைகிறது.
வாகன போக்குவரத்து நிறைந்த, காரணம்பேட்டை நால்ரோடு சிக்னலில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, டிவைடர் களுக்குள் செடி, கொடிகள், புற்கள் வளர்க்கப்பட்டு பசுமையுடன் பராமரிக்கப்படும். ஆனால், இங்குள்ள டிவைடர் இரும்பு கம்பிகள், கட்டடக் கழிவுகள், அறிவிப்பு பலகைகள், காய்ந்து கருகிய செடி கொடிகள் உள்ளிட்டவற்றால் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்தது. ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது தவிர, இங்குள்ள டிவைடர்களின் இடிபாடுகள் சரி செய்யப்படாமல், குப்பை குவியல்கள் அகற்றப்படாமலும் அப்படியே விடப்பட்டன. இதனை அகற்றி, சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

