/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகற்றிய குப்பை 'மீண்டும்' வந்தது... 'கவனிப்பு' இல்லாததால் 'அதிருப்தியா?'

ADDED : மே 03, 2024 01:32 AM

திருப்பூர்;திருப்பூர் கோர்ட் வீதி, போலீஸ் குடியிருப்பில் போலீஸ் லைன் மாரியம்மன் கோவில் உள்ளது. சமீபத்தில் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால், சாப்பிட்டு விட்டு துாக்கி எறியப்பட்ட 'பாக்கு மட்டை தட்டு' கோவில் வளாகத்திலேய கிடந்தது.
இதனை மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் அகற்றி, குப்பை வாகனத்தில் ஏற்றினர். சிறிது நேரத்தில், மீண்டும் அந்த கழிவுகளை அதே இடத்தில் கொட்டிச் சென்று விட்டனர்.
பொங்கல் விழாவின் போது, தினமும் துாய்மைப் பணியாளர்கள் கோவில் வளாகத்தில் சேகரமான கழிவுகளை அகற்றினர். விழா இறுதி நாளில் துாய்மைப் பணி செய்த சில பணியாளர்களுக்கு கோவில் நிர்வாகிகள் ஒரு தொகையை வழங்கியுள்ளனர்.
விழா நிறைவடைந்த நிலையில், கழிவுகளை அகற்ற வந்த ஊழியர்கள், பணம் கேட்டதாகவும், ஏற்கனவே கொடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த பணியாளர்கள் வாகனத்தில் ஏற்றிய கழிவுகளை மீண்டும் அதே இடத்தில் கொட்டி சென்றதாக தெரிய வந்தது.
கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், ''உரிய ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு இது குறித்து எச்சரித்து, கழிவுகளை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றனர்.