ADDED : பிப் 24, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அடுத்த எம்.நாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ரோட்டரி அவிநாசி கிழக்கு, இன்னர்வீல் அவிநாசி கிழக்கு, ரோட்ராக்ட் அவிநாசி கிழக்கு மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, ரேவதி மெடிக்கல் சென்டர் ஆகியன இணைந்து இலவச கண் பரிசோதனை, இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். நம்பியாம்பாளையம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். பொது மருத்து வத்தில் 80 பேருக்கும், கண் பரிசோதனை 120 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது.
கண் கண்ணாடி குறைந்த விலையில் 30 பேருக்கு வழங்கப்பட்டது.இலவச கண் அறுவை சிகிச்சைக்கு 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

