/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிக ஓட்டு வாங்கணும்! தி.மு.க., ஆலோசனை
/
அதிக ஓட்டு வாங்கணும்! தி.மு.க., ஆலோசனை
ADDED : மார் 24, 2024 12:39 AM
திருப்பூர் : திருப்பூர் வடக்கு, வேலம்பாளையம் பகுதி தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணியில், இ.கம்யூ., சார்பில், சுப்பராயன் திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரது வெற்றிக்கு தேர்தல் பணியாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் வேலம்பாளையம் தி.மு.க., சார்பில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் தினேஷ்குமார், பகுதி செயலாளர் ராமதாஸ், காங்., தலைவர் கிருஷ்ணன், இ.கம்யூ., நடராஜன் முன்னிலை வகித்தனர்.
வேலம்பாளையத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டணி வேட்பாளரை அதிகளவிலான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது குறித்தும், தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

