/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய கட்டணத்தில் தடுப்பூசி போடலாம்! கால்நடை மருத்துவ கல்லுாரி அழைப்பு
/
மானிய கட்டணத்தில் தடுப்பூசி போடலாம்! கால்நடை மருத்துவ கல்லுாரி அழைப்பு
மானிய கட்டணத்தில் தடுப்பூசி போடலாம்! கால்நடை மருத்துவ கல்லுாரி அழைப்பு
மானிய கட்டணத்தில் தடுப்பூசி போடலாம்! கால்நடை மருத்துவ கல்லுாரி அழைப்பு
ADDED : ஜூலை 03, 2024 02:47 AM

உடுமலை:பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில், செல்லபிராணிகளுக்கு, மானிய கட்டணத்தில், தடுப்பூசி போடுவதற்கான அரசின் சுழல்நிதி திட்ட துவக்க விழா நேற்று நடந்தது.
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை சிகிச்சை வளாகம் பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், செல்ல பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இதில், அரசு சார்பில், செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசின் சுழல் நிதி திட்ட துவக்க விழா நேற்று நடந்தது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., சிகிச்சையியல் இயக்குனர் சத்தியமூர்த்தி, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் குமாரவேல் துவக்கி வைத்தனர்.
திட்டத்தின் கீழ், வெறிநோய் தடுப்பூசி, டி.எச்.பி.பி.ஐ.எல்., தடுப்பூசி மற்றும் பூனைகளுக்கான தடுப்பூசிகள் மானிய கட்டண முறையில், செலுத்தப்படும்.
பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில், காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை இத்திட்டத்தின் கீழ், தடுப்பூசிகள் செலுத்தப்படும்; விடுமுறை நாட்களில், காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை முகாம் நடக்கும்.
இந்த வாய்ப்பை செல்ல பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, 'கால்நடை சிகிச்சை தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு,' குறித்த சாப்ட்வேர் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கப்பட்டது. கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், செல்ல பிராணிகள் வளர்ப்போர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.