/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஓரா ஜூவல்லரி' சார்பில் தங்க, வைர நகை கண்காட்சி
/
'ஓரா ஜூவல்லரி' சார்பில் தங்க, வைர நகை கண்காட்சி
ADDED : ஏப் 27, 2024 01:44 AM

திருப்பூர்;கோவை ஓரா ஜூவல்லரி நிறுவனம் சார்பில் திருப்பூர், பங்களா ஸ்டாப் அருகேயுள்ள ஆர்.கே., ரெசிடென்சி ஓட்டலில், தங்க வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் இக்கண்காட்சி நாளை (28ம் தேதி) நிறைவடைகிறது. காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
ஓரா ஜூவல்லரி நிறுவன மேலாளர் பிரபு கூறியதாவது: கண்காட்சியில் 25 சதவீதம் வைர நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். குறிப்பிட்ட வைர நெக்லஸ், 12,499 ரூபாய் முதல் தவணை செலுத்தி பெற்றுச் செல்லலாம். மீதி தொகை எளிய மாத தவணையில் செலுத்தலாம்.
நாட்டின் மிகச் சிறந்த மணப்பெண் நகை விற்பனையில் ஒன்றாக ஓரா நிறுவனம் உள்ளது. முப்பது நகரங்களில் 68 கிளைகளுடன் செயல்படுகிறது. ஆண்ட்வெர்ப், ஹாங்காங், டோக்கியோ, நியூயார்க், மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து வடிவமைப்பு மையங்களுடன் புதிய நகைகள் வடிவமைப்பில் முன்னோடியாக உள்ளது.
பல நுாற்றாண்டு பெருமை வாய்ந்த மரபு வழி கைவினைஞர்கள் தயாரிப்பு; அற்புத வடிவமைப்பு பெல்ஜிய வைரங்கள்; நுட்பமான டிசைன் வண்ணக்கற்கள் மணப்பெண் செட், 73 முக காப்புரிமை பெற்ற ஓரா கிரவுன் ஸ்டார் உள்ளிட்ட பிரத்யேக நகைகள் எங்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

