ADDED : ஆக 18, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் பிறந்த நாளை அவிநாசி, காங்கயம் பகுதியில் அக்கட்சியினர் கொண்டாடினர்.
அவிநாசியில், வி.சி.க., வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பின், அவிநாசி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மாரிச்சாமி, ரங்கசாமி, ரவி, கருப்பசாமி, ரஞ்சித் உட்பட பலர் பங்கேற்றனர்.
* காங்கயத்தில், அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், கட்சி கொடியேற்றியும், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் கட்சியினர் பிறந்த நாள் கொண்டாடினர். கிளை செயலாளர் கன்னிமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆற்றலரசு, செந்தில்குமார், ஜெயக்குமார், தனபால் உட்பட பலர் பங்கேற்னர்.
---

