ADDED : ஜூன் 03, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூரை சேர்ந்த மீனா என்பவர் தனது கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் கரூர், சின்ன தாராபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் திருப்பூருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். கார், காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ரவுண்டானாவில் திரும்பியது.
திருச்சியிலிருந்து கோவைக்கு சென்ற அரசு பஸ் திரும்பிய போது, பஸ்சின் பின்புறத்தில் கார் சிக்கியது. பஸ் டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காரில் வந்த, நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.